வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் விடுப்பு - தமிழக அரசு அரசாணை

0 3168
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் விடுப்பு - தமிழக அரசு அரசாணை

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, குழந்தையை பராமரிக்க, 270 நாள்கள் பராமரிப்பு விடுப்பு அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், இந்த விடுப்பு, அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்றும், இதற்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வாடகைத் தாய் மூலம் பெறும் 2 குழந்தைகளுக்கு மட்டுமே இந்த விடுப்பு வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments