பனாமா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக நிலநடுக்கம் பதிவு!
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள போகா சிகாவிற்கு தெற்கே 62 கிலோமீட்டர் தொலைவில் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Comments