பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா..!

0 3480

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், தனது பதவியை ராஜினாமா செய்வதாக, அறிவித்துள்ளார். செப்டம்பர் தொடக்கத்தில் பிரதமராகப் பதவியேற்ற அவர், 45 நாட்களில் பதவி விலகியுள்ளார்.

கடந்த மாதம் கொண்டுவந்த அரசின் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலரே அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த சூழலில், அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 28ஆம் தேதிக்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என, ஆளும் கன்செர்வேடிவ் கட்சி அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments