நான் என்ன பாவம் பண்ணேன்..? டிஜிபியிடம் எகிறிய ஸ்ரீமதியின் தாய்..! சிபிசிஐடி விசாரணை வேண்டாமாம்..!

0 4156
நான் என்ன பாவம் பண்ணேன்..? டிஜிபியிடம் எகிறிய ஸ்ரீமதியின் தாய்..! சிபிசிஐடி விசாரணை வேண்டாமாம்..!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் , சிபிசிஐடி போலீசார் தங்கள் உறவினர்களை அழைத்து மணிக்கணக்கில் விசாரிப்பதால் தனக்கு சிபிசிஐடி விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என்று மாணவியின் தாய் செல்வி டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் ,சிபிசிஐடி போலீசார் உண்மையை வெளிக் கொண்டு வருவார்கள் என்று மாணவியின் தாய் ஸ்ரீமதி கூறி இருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு தனது மகன் மற்று உறவினருடன் வந்த ஸ்ரீமதியின் தாய் செல்வி , சிபிசிஐடி போலீசார் தனது உறவினர்களை சம்மன் இல்லாமல் அழைத்து மணிக்கணக்கில் விசாரிப்பதாகவும், செல்போன்களை பறித்து வைத்துக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்

டி.ஜி.பி ஐயாவை பார்த்து நான் என்ன பாவம் பண்ணேன் ?என்று தான் கேட்டதாகவும் அதற்கு அவர் தெரியலையேம்மா என்று சொன்னதாகவும் தெரிவித்த செல்வி தனது மகள் உயிரிழப்பு கொலை என்றும், ஆனால் சிபிசிஐடி போலீசார் தற்கொலை என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக குற்றஞ்சாட்டிய செல்வி, சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தங்களுக்கு வேண்டாம் என்றும் சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments