வாகன ஓட்டுநர் குடித்திருந்தால் உடன் பயணிக்கும் நபருக்கும் அபராதம் - சென்னை காவல்துறை
வாகன ஓட்டுநர் குடித்திருந்தால் உடன் பயணிக்கும் நபருக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
இருசக்கரவாகனம் மற்றும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டப்படி ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுமென சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அறிமுகமில்லாத ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநருடன் பயணிக்கும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாதெனவும் கூறப்பட்டுள்ளது.
Comments