சுடலைன்னு பெயர் வச்சிக்கிட்டு 7 பேரை சுட்ட கொடூர போலீஸ்..! பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

0 9224

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சம்பவத்தன்று ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில்குமார் சிரத்கர், எஸ்.பி மகேந்திரனின் உத்தரவின் பேரில்  7 பேரை சுட்டுக் கொன்ற சுடலைக்கண்ணு என்ற போலீஸ்காரர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான நிலையில் அவர்கள் ஒவ்வொருவரின் உயிரிழப்புக்கும் காரணமானவர்களை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரிடம் எந்த விதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்தது என்று சுட்டிக்காட்டி உள்ள ஆணையம், தூத்துக்குடியின் ஸ்தல நிலவரம் தெரியாத வெளி மாநில அதிகாரிகளான ஐஜி சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில்குமார் சிரத்கர் , டி.எஸ்.பி லிங்கதிருமாறன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வைத்து 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவர்கள் துப்பாக்கி சுடும் வீரரான  சுடலைக்கண்ணுவை அழைத்துக் கொண்டு இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாகவும், சுடலைகண்ணு ஆர்வத்துடனும், விருப்பத்துடனும் எஸ்.பி மகேந்திரனுடன் சென்று அவரது உத்தரவின் பேரில் 2 பேரை சுட்டுக் கொன்றதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் காவலர் சுடலைகண்ணு, தனி ஆளாக செல்ப் லோடிங் ரைபிள் மூலம் மொத்தம் 17 ரவுண்டுகள் சுட்டதாகவும், இதில் திரேஸ் புரத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட  7 பேர் பலியாகி இருப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

2ஆம் நாள் எஸ்.பி மகேந்திரன் தன் மீது கல்வீசப்பட்ட ஆத்திரத்தில், தனது கன்மேன் ஸ்டாலினிடம் இருந்த துப்பாக்கியை வாங்கி 9 ரவுண்டுகள் சுட்டதாகவும், இதில் ஒருவர் பலியானதாகவும், சிலர் காயம் அடைந்துள்ளனர் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐஜி சைலேஸ்குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சிரத்கர், எஸ்.பி மகேந்திரன், டி.எஸ்.பி லிங்கதிருமாறன் காவல் ஆய்வாளர்கள் திருமலை, ஹரிகரன், பார்த்திபன், எஸ்.ஐக்கள் சொர்ணமணி, ரென்னீஸ், காவலர்கள் ராஜா, சங்கர், சுடலைக்கண்ணு, தாண்டவ மூர்த்தி, சதீஷ்குமார், ராஜா, கண்ணன், மதிவாணன் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். 7 பேரை சுட்டுக் கொலை செய்த சுடலைக்கண்ணு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments