டிப்பர் லாரியில் எடுத்து வரப்பட்ட மண்ணை கீழே கொட்டியபோது மின்சார வயர் உரசியதால் , மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி..!

0 7213

திருவள்ளூர் அருகே டிப்பர் லாரியில் மண் கொட்டும் போது மேலே சென்ற உயர் அழுத்த மின்சார ஒயர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியானார். 

நாராயணபுரத்தில் நடைபெறும் வீட்டு கட்டுமான பணிக்கு,வேலூர் அரசு மணல் குவாரியில் இருந்து டிப்பர் லாரியில் மண் எடுத்து வரப்பட்டது.

இதை கீழே கொட்டும் பணியை மேற்கொண்டபோது, மின்சார ஓயர் உரசியது.

இதில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த டிரைவர் தசரதன் பலியானார்.

தசரதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments