குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தால் ஒவ்வொரு 4 கி.மீட்டருக்கும் ஒரு பள்ளி அமைக்கப்படும் - ஆம் ஆத்மி வாக்குறுதி!

0 2392

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தால் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட எட்டு நகரங்களில் ஒவ்வொரு 4 கிலோ மீட்டருக்கும் ஒரு பள்ளி அமைக்கப்படும் என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள 48 ஆயிரம் அரசு பள்ளிகளில், 32 ஆயிரம் பள்ளிகள் மோசமான நிலையில் இருப்பதாக கூறிய சிசோடியா, ஆம் ஆத்மி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்குள் அகமதாபாத், சூரத், காந்திநகர் உள்ளிட்ட 8 நகரங்களில் தனியார் பள்ளிகளை விட நவீனத் தரத்தில் பள்ளி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments