ஆவின் பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட குலாப் ஜாமூனில் பூஞ்சை - தயாரிப்பு தேதி மாற்றி அச்சிடப்பட்டதா.?

0 3343

நாகர்கோவிலிலுள்ள ஆவின் பாலகத்தில் கெட்டுப்போன குலாப் ஜாமூன் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சாஜன் என்பவர் இன்று காலை, ஆவின் பாலகத்தில் பேக் செய்யப்பட்ட குலோப் ஜாமூனை 50 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

வீட்டிற்கு சென்று பாக்ஸை திறந்து பார்த்தபோது, அதில் பூஞ்சை இருந்ததாக கூறப்படும் நிலையில், காலாவதி தேதி முடியும் முன்பே கெட்டுப்போனதாக கூறி, கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த குலாப் ஜாமூன் காலாவதி ஆக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், அதற்கு முன்பே பூஞ்சை வந்தது எப்படி? தயாரிப்பு தேதி மாற்றி அச்சிடப்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments