பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த 11ஆம் வகுப்பு மாணவி படுகாயம்..!
திண்டுக்கல் அருகே தனியார் பள்ளியில் தங்கிப் பயின்று வரும் 11ம் வகுப்பு மாணவி, விடுதியின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விடுதியின் 3வது மாடியில் தங்கியிருந்த மாணவி சம்பவத்தன்று இரவு தனது அறைக்கு வெளியே தண்ணீர் பிடிக்கச் சென்ற போது கால் இடறி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டு மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நேரில் சென்று விசாரித்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் கட்டிடத்தில் தடுப்பு சுவருக்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ள கிரில் தடுப்பு கம்பிகள், 3 அடி உயரம் மட்டுமே உள்ளதால் மாணவி தவறி விழுந்ததாக, பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
Comments