முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவருடைய தோழியாக இருந்த சசிகலா மீது விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நீதிபதி ஆறுமுகச்சாமி நடத்திய விசாரணஅறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது. அதில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். டாக்டர் சிவக்குமார்,அப்போதையை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் மீது குற்றஞ்சாட் டப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு நடந்த அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக்கப் பட்டதாக கூறியுள்ள நீதிபதி ஆறுமுகசாமி எய்ம்ஸ் மருத்துவக் குழு ஐந்து முறை அப்போலா மருத்துவமனக்கு வந்திருந்தாலும் ஜெயலிதாவுககு முறையான சிகிச்சை தரப்படல்லை என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியே சிகிச்சை தேவைப்பட்டும் தரப்படவில்லை என்பதும் ஆறுமுகசாமி ஆணையத்தின் புகாராகும்.
Comments