ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த 6ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 8509

கன்னியாகுமரியில் ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த 6ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

மெதுகும்மல் பகுதியை சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன், கடந்த 24ஆம் தேதியன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும்போது, அதே
பள்ளிச்சீருடையில் வந்த மாணவன் ஒருவன், குளிர்பானத்தை கொடுத்து குடிக்க வைத்ததாக சொல்லப்படுகிறது.

அன்றிரவு சிறுவனுக்கு காய்ச்சல் வந்ததுடன், வாய், நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருந்ததாகவும், சிறுவனுக்கு இரு சிறுநீரகங்களும் செயல் இழந்ததாகவும் தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுவன், திங்கள்கிழமையன்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments