"பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறலாம், மருத்துவ அறிக்கைகள் பொய்யாக இருக்காது" - போக்சோ வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

0 3877

போக்சோ மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், தனக்கு எந்த துன்புறுத்தலும் குற்றவாளிகள் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் பிறழ் வாக்குமூலம் அளித்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் பொய் கூறலாம், ஆனால், மருத்துவ அறிக்கை பொய் கூறாது எனக் கூறி, அந்த வழக்கில், 2 பேரின்  இரட்டை ஆயுள் தண்டனையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது. 

டியூஷன் படிக்கச் சென்ற மாணவியை கடத்தி, 6 பேர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

இதில் இளவரசன், கார்த்திக் ஆகிய 2 பேருக்கு தஞ்சை கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்த நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். விசாரணையின்போது தனக்கு யாரும் துன்புறுத்தல் அளிக்கவில்லை என பெண் தெரிவித்தார்.

விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், பொதுவாக பாதிக்கப்பட்ட குழந்தைகள், சாட்சியங்கள் ஆகியோர், சமுதாயத்திற்கும், குற்றவாளிகளுக்கும் பயந்து சாட்சி சொல்வதற்கு முன் வருவதில்லை, அதுபோன்ற வழக்குகளில் இதுவும் ஒன்று என கருத்து தெரிவித்தனர்.

மருத்துவரிடம் மாணவி அளித்த வாக்குமூலம், மருத்துவ சோதனை ஆகியவற்றின் மூலம், துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதிப்படுத்தப்படுகிறது என கூறி, 2 பேரின் இரட்டை ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY