சேலத்தில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து 7 பேர் படுகாயம்

0 2634

சேலத்தில், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் வசித்து வரும் மாணிக்கம் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது, திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதில் வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டினுள் இருந்த 3 சிலிண்டர்களை அகற்றிய நிலையில், சேதமடைந்த வீட்டில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments