இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தமிழக சட்டசபை

0 3125

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

கூட்டம் தொடங்கியதும், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா,  முன்னாள் எம்எம்ஏ கோவைத்தங்கம் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து, காலை 11 மணியளவில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். இதனிடையே எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments