டெல்லியில் 2 நாள் வேளாண்மை மாநாடு மற்றும் கண்காட்சியை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!
டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள வேளாண்மை மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
டெல்லியில் நடைபெறும் வேளாண்மை மாநாட்டில், பிரதம மந்திரி கிசான் சம்ருத்தி கேந்திரா எனப்படும் விவசாய இடு பொருட்களுக்கான 600 மையங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
மேலும் ஒரு தேசம், ஒரு உரம் என்ற திட்டத்தின் கீழ் ”பாரத்” என்ற பெயரில் ஒற்றை பிராண்டின் கீழ் உரங்களை சந்தைப்படுத்த ”பாரத் யூரியா” என்ற பைகளை பிரதமர் அறிமுகப்படுத்த இருக்கிறார்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித் தொகையின் 12வது தவணைத் தொகையான 16 ஆயிரம் கோடி ரூபாயையும் மோடி விடுவிக்க இருக்கிறார்.
300 அக்ரி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியையும் திறந்து வைக்கும் பிரதமர், ”இந்தியன் எட்ஜ்” என்ற மின் இதழையும் வெளியிடுகிறார்.
மாநாட்டில் விவசாய ஆராய்ச்சியாளர்களும், கொள்கை வகுப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர். பல்வேறு விவசாய இயக்கங்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் காணொளி வாயிலாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments