மத்தியப்பிரதேசத்தில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான இந்தி மொழி பாடப்புத்தகங்கள் வெளியிட்டார் - உள்துறை அமைச்சர் அமித்ஷா
நாட்டில் முதன்முறையாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் உருவான மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை, மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உடற்கூறியல், உயிர் வேதியல், உடலியல் ஆகிய 3 பாடங்களுக்கான புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்படுவதாகவும், விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும் என்றும் அமித்ஷா கூறினார்.
Comments