டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன்..!
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையில் நாளை ஆஜராகும்படி, டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
ட்விட்டரில் இதை உறுதி செய்துள்ள சிசோடியா, டெல்லியிலுள்ள சிபிஐ தலைமையகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆஜராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமது வீட்டில் ஆகஸ்ட் மாதம் 14 மணி நேரம் சிபிஐ சோதனை நடத்தியதாகவும், வங்கி கணக்கை ஆய்வு செய்ததாகவும், ஆனால் சிபிஐ எதுவும் கண்டறியவில்லை என்றும் அதில் சிசோடியா தெரிவித்துள்ளார்.
Comments