பர்கூர் மலைப்பகுதியில் கனமழையினால் சாலையில் மண்சரிவு.. நள்ளிரவு முதல் போக்குவரத்து துண்டிப்பு..!

0 2605

பர்கூர் மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையினால் பர்கூர் மலைச்சாலையில்  மண் சரிவு ஏற்பட்டு  போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் ரோட்டில் நெய்க்கரை பகுதியிலிருந்து செட்டிநொடி வரை ஆறு இடங்களில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

அந்தியூர், பர்கூர், கர்கேகண்டி, ராமாபுரம், கர்நாடகா செல்லும் அனைத்து வழிகளிலும்  போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கர்நாடகா செல்லும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள்  வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments