திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் அருகே 20 பேரை கடித்த கதண்டுகள் - 2 பேர் கவலைக்கிடம்

0 2670

திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே கதண்டு கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

பனை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் சாலையில் நடந்து சென்ற 20 பேரை கடித்தன.

10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணசேகரன், தர்மராஜ் ஆகிய முதியவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments