அவனா நீ.. அர்னவ் அப்பவே அப்படியாம் திருநங்கை திடுக் புகார்..! மலேசியாவில் இருந்து ஒரு ஆப்பு

0 7819

காதல் மனைவியை தாக்கிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீரியல் நடிகர் அர்னவ், திவ்யாவுக்கு முன்பே மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவரை திருமணம் செய்து  ஏமாற்றியது அம்பலமாகி உள்ளது.

நைனா முகமது... அம்ஜத்.... ஆர்யா.... இது எல்லாம் தனி தனி நபர்கள் கிடையாது... இந்த மொத்த பெயர்களின் ஒற்றை உருவம் தான் செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ்..!

கர்ப்பிணியான காதல் மனைவி திவ்யாவை எட்டி உதைத்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அர்னவ் புழல் சிறையில் கம்பி எண்ணி வருகின்றார். அவரை ரொம்ப நல்லவன்னு சிலர் வீடியோ எல்லாம் வெளியிட்ட நிலையில் அம்ஜத் என்ற பெயரில் அர்னவ் மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவரை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் தற்போது அம்பலமாகி உள்ளது.

அடாவடி அர்னவ் கைதானது குறித்து மீடியாக்கள் மூலம் அறிந்த மலேசியாவை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற திருநங்கை , தான் சந்தித்த ஒரே நாளில் தன்னை பிரிய மனமில்லாமல் விமான நிலையத்தில் ஒப்பாரி வைத்து அழுத காதல் மன்னன் அர்னவ்வின் அந்த நாள் ஆக்டிங் குறித்து திவ்யாவின் வழக்கறிஞர் பிரியாவிடம் விவரித்துள்ளார்

வீட்டில் வைத்த பெயர் நைனா முகமது, தன்னிடம் அம்ஜத் என்று அறிமுகமாகி உள்ளார். சக்தி என்ற சீரியலில் சைக்கோவாக நடித்த போது ஆர்யா என்றும் செல்லம்மாவுக்காக அர்னவ் ஆக அவதாரம் எடுத்துள்ளதாக பிரியதர்ஷினி கூறி உள்ளார்

கேரளா படகு வீட்டில் ஒன்றாக தங்கி பொழுதை கழித்த போது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் வைத்து அர்னவ் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், மலேசியாவில் வைத்து வேறு வேறு பெண்களிடம் சாட்டிங்கில் மூழ்கி கிடந்ததை தட்டிக் கேட்டதால் அர்னவ் தன்னை கொடூரமாக தாக்கியதாக திருநங்கை பிரியதர்ஷினி குற்றஞ்சாட்டி உள்ளார்

தன்னிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு அர்னவ்வின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட உள்ளதாக திருநங்கை பிரியதர்ஷினி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments