பழந்தின்னி வவ்வால்களுக்காக பல ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடிவரும் கிராம மக்கள்..!
பழந்தின்னி வவ்வால் இனத்தை பாதுகாக்கும் பொருட்டு கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அடரி கிராம மக்கள் பல ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
செல்லியம்மன் கோவில் தோப்புப் பகுதியில் ஏராளமாக வசிக்கும் பழந்தின்னி வவ்வால்களுக்காக பழம் தரும் மரங்களை வளர்ப்பதாகவும், எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பட்டாசு வெடிப்பதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
லட்சக்கணக்கில் வசித்து வந்த வவ்வால்களின் எண்ணிக்கை உயரமான மரங்களின் அழிவின் காரணமாக ஆயிரக்கணக்கில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments