கொடூர கொலையாளி முடியில்லா மன்மதன் போலீசில் சிக்கியது எப்படி ? ஊதாரிக்கு தந்தை உடந்தை
மாணவியை ரெயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட கொடூர கொலையாளி தலையில் முடி இல்லாததை மறைக்க தொப்பிபோட்டுக் கொண்டு மன்மதன் போல வலம் வந்தபோது போலீசாரிடம் சிக்கி உள்ளான். போலீசாருக்கு துப்புக் கொடுத்த அந்த ஒரு நிமிடம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
ஆடுகளவானி போல பம்மியபடியே வேனில் ஏறி பதுங்கும் இவர் தான் கல்லூரி மாணவி சத்யஸ்ரீயை ஓடும் ரெயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கொடூர கொலையாளி சதீஷ்..!
மாணவிக்கு 14 வயதாக இருக்கும் போதிலிருந்து அவரை விரட்டுவதை வாடிக்கையாக செய்து வந்த ஊதாரி இளைஞர் சதீஷை , சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த தந்தை கண்டிக்க தவறியதால் அவன் முழு நேர மன்மதனாக வலம் வர தொடங்கி உள்ளான்.
அந்த மாணவி மாலை நேரக்கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் அருகில் உள்ள மெக்கானிக் கடையில் விருவு பூனை போல காத்திருக்கும் சதீஷ், தனது ஆர் ஒன் பைவ் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று மறிப்பது, காதல் தொல்லை கொடுப்பது என இருந்துள்ளான். எஸ்.எஸ், ஐ தயாளன் மகன் என்பதால் அவனை போலீசார் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகின்றது
தலையில் முடி இல்லாததை மறைத்து யூத் போல தெரிய வேண்டும் என்று எப்போதும் போராளி போல கருப்பு தொப்பியுடன் வளம் வருவதை வாடிக்கையாக்கி உள்ளான் சதீஷ்
3 மாதங்களுக்கு முன்பு காதலிக்க மறுத்த மாணவியை கல்லூரி வாசலில் வைத்து தலைமுடியை பிடித்து தாக்கிய சதீஷ் மீது இந்திய தண்டனை சட்டம் 75 என்ற சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு அவனது தந்தை சதீஷுக்கு பக்கபலமாக இருந்துள்ளார்
முழுக்க முழுக்க ஒரு வித சைக்கோ போல வலம் வந்த சதீஷ் சம்பவத்தன்று மாணவி தோழிகளுடன் அமர்ந்திருப்பதை தூரத்தில் இருந்து நோட்டமிட்டுக் கொண்டே செல்போனில் பேசியவாரு நின்றுள்ளான்
மின்சார ரெயில் அருகில் வருவதை அறிந்து விரைந்து வந்து மாணவியை பிடித்து செத்து ஒழி என்று கூறியவாறு ரெயிலில் பிடித்து தள்ளி கொலை செய்து விட்டு தப்பி உள்ளான். ரெயில் நிலையத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று நிறுத்தி விட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளான். சிசிடிவியில் இடம் பெற்ற அவனது புகைப்படத்தை வைத்து 7 தனிப்படை போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
வெள்ளிக்கிழமை காலை ஒரு நிமிடம் அவனது செல்போனை ஆன் செய்தான் சதீஷ். அதனை வைத்து அவன் துரைப்பாக்கம் பகுதியில் நடமாடுவதை உறுதி செய்த போலீசார் அங்குள்ள சாலையில் கருப்பு தொப்பியுடன் நடந்து சென்ற சதீஷை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக கொலையாளியின் முகம் பொது வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்து அழைத்துச்சென்ற போலீசார் ஆஜர்படுத்திவிட்டு அழைத்து வரும் போது அவனை முகத்தை மூடாமல் அழைத்து வந்தனர்
உள்ளே போகும் போதே முகத்தை மூடி அழைத்து வந்தது ஏன் என்று கேட்டு அவனை வெழுக்கத்துடித்த வழக்கறிஞர்கள், மீண்டும் சுற்றுபோட்டதால் தப்பித்தால் போதும் என்று குனிந்து பதரியபடியே வந்த சதீஷுக்கு போலீஸ் வேணுக்குள் காத்திருந்த கேமரா பேரதிர்ச்சியை கொடுத்தது
இதனையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி 28 ந்தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டான் சதீஷ். ((spl gfx out)) ஊதாரியாக சுற்றிய தனது மகன் சதீஷுக்கு எஸ்.எஸ்.ஐ தயாளன் போலீஸ் பவரை பயன் படுத்தி தொடர்ந்து உடந்தையாக இருந்ததால், அவன் தற்போது கொடூர கொலையாளியாக மாறி சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான் என்கின்றனர் காவல்துறையினர்
Comments