ஐபோன் சார்ஜர் விவகாரம்..ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.165 கோடி அபராதம் விதித்த பிரேசில் நீதிமன்றம்..
சார்ஜர் இல்லாமல் ஐபோன்கள் விற்பனை செய்த விவகாரத்தில், ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 165 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிரேசில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரேசிலில் சார்ஜர் இல்லாத ஐபோன்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், ஐபோன் 13 ரக போன்களை சார்ஜரின்றி ஆப்பிள் நிறுவனம் விற்றதாக, சா போலோ நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மேலும், இது வாடிக்கையாளர்களை கூடுதல் தயாரிப்புகளை வாங்க கட்டாயப்படுத்தும் தவறான நடைமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பிரேசிலில் கடந்த 2 ஆண்டுகளில் ஐபோன் 12 அல்லது 13 ரக போன்களை வாங்கியவர்களுக்கு சார்ஜர் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments