தொடர் மழை காரணமாக கிராமத்திற்குள் படையெடுக்கும் சிவப்பு அட்டை பூச்சிகள்..
நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் ஊராட்சியில் உள்ள தாண்டா கவுண்டம் பாளையம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து சிவப்பு நிற மர அட்டைகள் ஆயிரக்கணக்கில் ஊருக்குள் படையெடுத்துள்ளன.
உணவு பொருட்களில் இந்த அட்டை பூச்சிகள் விழுந்து விடுவதாலும், உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சுவதாலும், தூங்கி கொண்டிருக்கும் போது காதுக்குள் நுழையும் தன்மையை கொண்டுள்ளதாலும், கிராம மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். .
Comments