கேரளாவில் மந்திரவாதம் செய்ய சிறுவர்களை பயன்படுத்திய பெண் மந்திரவாதி கைது..!
கேரளாவில் மலையாளப்புழா என்ற இடத்தில், மந்திரவாதம் செய்ய சிறுவர்களை பயன்படுத்திய தேவகி என்ற பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மந்திரவாதி தேவகி, நாக்கை துருத்திக்கொண்டு உருமுவதும், எதிரே பாம்பு படம் எடுப்பதுபோல் கைகளை அசைக்கும் ஒரு சிறுவன், பின்னர் மயங்கி விழுவதுமான காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.
இந்த காட்சிகளை கண்ட பொதுமக்கள், தேவகியின் வீட்டை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. மந்திரவாதி தேவகியை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments