யாருக்கும் பயப்பட மாட்டேன், அடங்கிப்போக மாட்டேன் அன்னபூரணி திடீர் சவால்..! ஆன்மீக அனுபவ வசூல்

0 9750

கடந்த 6 வருடங்களாக பக்தர்களிடம் இருந்து தீட்சைக்காக பணம் வசூலித்து வருவதாக கூறி உள்ள அன்னபூரணி , ஆன்மீகம் என்ற பெயரில் நிறைய பித்தலாட்டம் நடப்பதாகவும், தான் யாருக்கும் அடங்கிபோக மாட்டேன் என்றும் சவால் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் ஆசிரமம் அமைத்து அம்மன் போல வேடமிட்டு டான்ஸ் சாமியார் அன்னபூரணி பக்தர்களிடம் பணம் வசூல் செய்துவருவதாக மயிலாடுதுறையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஆடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அன்னபூரணி, இன்னிக்கு நேத்திக்கு அல்ல 6 வருடங்களாக ஆன்மீகத் தேடுதல் உள்ளவர்கள் தன்னிடம் வந்து கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு தீட்சைக்கு குருதட்சணை வாங்கி ஒவ்வொருவருக்கும் ஆன்மீக அனுபவம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்

ஆன்மீகம் என்ற பெயரில் எவ்வளவோ பித்தலாட்டம் நடந்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்த அன்னபூரணி தான் தீட்சை கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது என்றும், தன்னை சீண்டினால் ஒதுங்கிப்போக மாட்டேன் என்றும் யாருக்கும் பயப்பட மாட்டேன், அடங்கிபோக மாட்டேன் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments