கேஎப்சி கிளையில் வேக வைக்காத சிக்கன்.. வாடிக்கையாளர் குற்றச்சாட்டு.. வருத்தம் தெரிவித்த ஸ்விக்கி, கேஎப்சி நிறுவனங்கள்..!

0 3328

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் KFC உணவகத்தில் வேக வைக்காத சிக்கன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சேகர் என்பவர் ஸ்விக்கி மூலம் KFC ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். பின்னர் சாப்பிட முயன்றபோது , முழுமையாக வேக வைக்காமல்  இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, KFC கிளையில் புகாரளித்துள்ளார்.

சரியான பதில் அளிக்காததால்,  ட்விட்டரில்  நடந்த சம்பவத்தை பதிவிட்டு SWIGGY,KFCமற்றும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு வாரியத்தை tag செய்துள்ளார். இதையடுத்து வருத்தம் தெரிவித்துள்ள ஸ்விகி மற்றும் Kfc நிறுவனங்கள், இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதாக உறுத்தியளித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments