ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு-2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு
கர்நாடக கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வில் இடம்பெற்ற 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
ஹிஜாப்புக்கு தடை விதித்ததை எதிர்க்கும் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதை உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா தீர்ப்பு வெளியிட்டனர்.
தடையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது செல்லும் என்ற நீதிபதி குப்தா, இஸ்லாமில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.
நீதிபதி துலியா, தடை விதிக்கும் அரசு உத்தரவு செல்லாது, உயர்நீதிமன்றம் தவறான பாதையில் சென்றுள்ளது ,ஹிஜாப் அணிய வேண்டுமா, வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் என்று தீர்ப்பளித்தார். 2 பேரும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டதால், வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Comments