ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்த நட்சத்திர மோதிர வளைய அமைப்பு
வோல்ப்-ராயெட் 140 (Wolf-Rayet 140) என்ற இரட்டை நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று கடக்கும் போது வெளியாகும் தூசி, மோதிரங்கள் போன்ற தோற்றமளிக்கும்.
இந்த மோதிர அமைப்பை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 50 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த இரட்டை நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன.
ஒவ்வொரு எட்டு ஆண்டுக்கொரு முறை நட்சத்திரங்கள் நெருங்கி வரும்போது இந்த வளைய அமைப்பு தோன்றுகிறது. தரையிலிருந்து தொலைநோக்கி மூலம் படம் பிடித்ததில் இரண்டு வளையங்களை மட்டுமே படம் பிடிக்க முடிந்தது. ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் 17 வளையங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
Comments