தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் கிடைப்பதை தடுக்கும் வழிமுறைகள் என்ன?-மத்திய - மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

0 2593

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

VPN செயலிகளை முறைப்படுத்துவது தொடர்பாக, தாமாக வழக்கெடுத்து நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, "பப்ஜி, free fire போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால், குழந்தைகள் விளையாட்டு மைதானத்தையே மறந்துவிட்டதாக, கவலை தெரிவித்தனர்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அண்மையில் தடை செய்யப்பட்டதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து யூடியூப், கூகுள் பதிலளிக்கவும், மத்திய-மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments