ஹவாலா மூலம் ரூ.900 கோடி அனுப்பியதாக குற்றச்சாட்டு.. வெளிநாடுகளை சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேர் கைது!

0 4151

ஹைதராபாத்தில் ஹவாலா மூலம் 900 கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக சீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளைச் சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேரை, போலீசார் கைது செய்தனர்.

காந்தி நகரில் அண்மையில் போலீசார் சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட மூன்றரை கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அப்போது கைதான 6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுபோன்று 900 கோடி ரூபாயை, ஹவாலா வழிகளில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, ஹைதராபாத்தை சேர்ந்த 3 பேர், டெல்லியை சேர்ந்த 5 பேர் உட்பட 12 பேரை கைது செய்து, ஹவாலா மோசடியில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments