"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஹைதராபாத்தில் தரையிறங்கும் போது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பைலட் கேபினில் புகை..!
கோவாவிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறங்கும் போது பைலட் கேபினில் புகை எழுந்தது.
இதுகுறித்து விமானி, விமான நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து விமானம் தீயணைப்பு வாகனங்களுக்கு மத்தியில் தரையிரங்கியது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். விமான நிலையத்தில் உள்ள தொலைதூர வாயிலுக்கு விமானம் கொண்டு செல்லப்பட்டது.
ஆய்வில், தொழில்நுட்பக் கோளாறால் புகை வந்ததாக விமான நிறுவத்தின் செய்தித் தொரடர்பாளர் தெரிவித்தார்.
Comments