4 வது வந்தே பாரத் ரயில்.. பிரதமர் தொடங்கி வைத்தார்
இந்தியாவின் நான்காவது வந்தே பாரத் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் இமாச்சல் பிரதேசத்தின் அம்ப் அந்தோரா - தலைநகர் டெல்லி இடையே பயணத்தை ஆரம்பித்து உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் உனாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்த ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் ரயில் சொகுசு வசதிகளுடன் கூடிய அதிவேக ரயிலாகும். ஏற்கனவே டெல்லி - வாரணாசி, டெல்லி- கட்ரா மற்றும் காந்திநகர் - மும்பை ஆகிய 3 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, அம்ப் அந்தோரோ - டெல்லி இடையே 4 வது ரயில் இயக்கப்படுகிறது.
ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் 3 வந்தே பாரத் ரயில்களை காட்டிலும், 4 வது வந்தே பாரத் ரயில் எடை குறைவானது. 52 விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக்கூடியது. வந்தே பாரத் ரயிலில், டெல்லியிலிருந்து சண்டிகருக்கு 3 மணி நேரத்தில் செல்ல முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்
Comments