விசிலை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு வயது பெண் குழந்தை உயிரிழப்பு!

0 5460

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் விசிலை விழுங்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பெண் குழந்தை உயிரிழந்தது.

பத்மாவதி நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி ஆனந்தராஜ் - வனஜா தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தை கயல்விழி, திடீரென மயங்கி விழுந்தது. எதையாவது குழந்தை விழுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பெற்றோர், அதன் முதுகில் தட்டியபோது, வாயிலிருந்து விசில் வெளியே வந்து விழுந்தது.

போரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின்பேரில் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments