மருந்தகங்களில் சிகிச்சை பார்த்துவந்த 2 போலி மருத்துவர்கள் கைது.. தப்பியோடிய 4 போலி மருத்துவர்களுக்கு போலீசார் வலை!

0 2838

கடலூரில், பெண் உட்பட இரண்டு போலி மருத்துவர்களை, போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள மருந்தகங்களில், விற்பனையாளர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, மருந்து- மாத்திரை வழங்குவதாக எழுந்த புகாரில்,  மாவட்ட சுகாதார அதிகாரிகள், காவல்துறையினருடன் இணைந்து, மருந்தகங்களில் ஆய்வு நடத்தினர்.

அப்போது மருந்தகங்களில் மருத்துவம் பார்த்து வந்த, சிதம்பரத்தை சேர்ந்த சுதா, காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த பழனி ஆகிய போலி மருத்துவர்களை, போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 4 போலி மருத்துவர்களையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments