தொழில்நுட்ப கோளாறு..? - ஃபேஸ்புக்கில் ஒரே நாளில் 118 மில்லியன் ஃபாலோயர்களை இழந்த மார்க் ஸக்கர்பெர்க்..!

0 4646
தொழில்நுட்ப கோளாறு..? - ஃபேஸ்புக்கில் ஒரே நாளில் 118 மில்லியன் ஃபாலோயர்களை இழந்த மார்க் ஸக்கர்பெர்க்..!

ஃபேஸ்புக் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனர்கள் பலர், தங்களைப் பின்தொடர்வோரை அதிக அளவில் இழந்துள்ள நிலையில், மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க்-கும் 118 மில்லியன் ஃபாலோயர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அதன் செய்தித் தொடர்பாளர், ஃபேஸ்புக்-கில் பயனர்கள் பலர் தங்களை பின்தொடர்ந்து வந்த ஃபாலோயர்களின் எண்ணிக்கை திடீரென மிகப்பெரிய சரிவை சந்தித்ததாக புகார் அளித்துள்ளதாகவும், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments