இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார்.. விசாரணைக் கமிஷன் நியமனம் செய்துள்ள மத்திய அரசு!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்தப் புகாரை ஆராய மத்திய அரசு 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமனம் செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த மெய்டன் பார்மசூட்டிகல்ஸ் தயாரித்த இருமல் மருந்து காம்பியாவிற்கு அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், 66 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்நிறுவனத்தின் இருமல் மருந்துகளுக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments