வெல்டிங் வைத்தபோது திடீரென தீ பிடித்த லாரி.. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது..!
விழுப்புரம் அருகே வெல்டிங் வைத்தபோது லாரியில் பற்றிய தீ நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கட்டுப்படுத்தப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து, மகாராஷ்டிராவுக்கு எம்.ஆர்.எப். டயர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, பம்பர் பகுதியில் ஏற்பட்ட பழுதால், கோலியனூர் கூட்டுச்சாலையில் உள்ள ஒரு கடையில் நிறுத்தப்பட்டு, வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றது.
தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் வந்து, தீயை கட்டுப்படுத்தினர். எனினும் விபத்தில் சுமார் 150 டயர்கள் எரிந்து வீணாகின.
எர்த் வைக்காமல் வெல்டிங் வைத்ததால், ஸ்பார்காகி, தீ பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, வளவனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments