எந்த பெண்ணுக்கும் என் மாதிரியான நிலை வரக்கூடாது ? கையெடுத்து கும்பிட்ட திவ்யா

0 3741

தலைமறைவாக இருக்கும் சின்னத்திரை நடிகர் அர்னவ்வை விசாரணைக்கு ஆஜராக போரூர் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ள நிலையில் , அர்னவ் செய்த கொடுமைகள் குறித்து காதல் மனைவி திவ்யா, 2 வது நாளாக மகளிர் ஆணையத்தில்  ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கர்ப்பிணி மனைவி திவ்யாவை எட்டி உதைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் போலீஸ் பிடியில் சிக்காமல் சின்னத்திரை நடிகர் அர்னவ் தலைமறைவான நிலையில் அவரை வருகின்ற 14ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதற்கிடையே அர்னவ் மீது மகளிர் ஆணையத்தில் அளித்த புகார் தொடர்பான விசாரணைக்கு 2ஆவது முறையாக ஆஜரானார். அர்னவ்வின் காதலி அன்சிதா தன்னுடன் சண்டையிட்ட செல்போன் உரையாடல்களை ஆணையத்தில் ஒப்படைத்த திவ்யா, தனக்கு நியாயம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

எந்த ஒரு பெண்ணுக்கும் என்னை போன்ற நிலை வர கூடாது. எல்லோரும் என்னை நீ கணவனுக்கு அட்ஜஸ்ட் பண்ணி போமா என்று சொல்கிறார்கள், எல்லா பெண்களும் இப்படி அட்ஜஸ்ட் பண்ணிட்டு போனா யார் தான் அர்னவ் போன்ற ஆண்களுக்கு எதிராக குரல் குடுப்பார்கள் என்று ஆதங்கப்பட்டார் திவ்யா...

காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு முதல் தகவல் அறிக்கையில் ஐ பி சி பிரிவுகளை போலீசார் சரியாக பதிவு செய்யவில்லை என்றும் இது குறித்து மாநில மகளிர் ஆணையத்திடம் விரிவாக எடுத்து கூறி உள்ளதாகவும் திவ்யா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments