உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கிய 2,390 ரவுடிகளை, சுதந்திரமாக நடமாடவிட்ட மர்மம் என்ன? - எடப்பாடி பழனிசாமி..
உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கிய 2,390 ரவுடிகளை, சுதந்திரமாக நடமாட விட்டதன் மர்மத்தை காவல்துறை விளக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில,"ஆப்ரேஷன் மின்னல்" பெயரில் தமிழகம் முழுவதும் 3,905 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக டிஜிபி அறிக்கை வெளியிட்டதை குறிப்பிட்டு உள்ளார்.
அவர்களில் 705 பேரை சிறையில் அடைத்து விட்டு எஞ்சிய 2,390 பேரிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டதாக, செய்திகள் வெளியாகியுள்ளதாக எடப்பபாடி பழினிசாமிதெரிவித்துள்ளார்.
டிஜிபி அறிக்கை வெளியிட்ட அன்றே, ஊத்துக்கோட்டையில் வடக்கு மண்டல ஐ.ஜி.யின் பூர்வீக வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ள அவர் 2,390 ரவுடிகளை கண்காணிப்பு வளையத்தில் வைக்கும் வேலையை, காவல்துறை செய்கிறதா? என்று கேட்டுள்ளார்.
இனியாவது, சட்டம் - ஒழுங்கை, முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுக்குள் வைக்குமாறும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Comments