குழந்தைகள் காப்பகத்திற்குள் திடீரென கசிந்த கார்பன் மோனாக்சைடு.. 27 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் குழந்தைகள் காப்பகத்தில் கார்பன் மோனாக்சைடு வாயுக் கசிவு ஏற்பட்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலென்டவுனில் உள்ள ஹேப்பி ஸ்மைல்ஸ் காப்பகத்தில் 25 குழந்தைகள் மற்றும் எட்டு பணியாளர்கள் இருந்தனர். அப்போது, கார்பன் மோனாக்சைடு வாயு அளவுக்கு அதிகமாக வெளியேறியது.
இதனை சுவாசித்த குழந்தைகள் கடும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி சில வினாடிகளில் சுருண்டு விழ தொடங்கினர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர், உயிர்காக்கும் கருவிகளுடன் சென்று காப்பகத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
Comments