திவ்யா – அன்ஷிதா சக்களத்தி சண்டை ரசிக்கும் அர்னவ்..! கான்பரன்ஸ் காலில் இப்படியாடா ?

0 5340

போலீஸ் விசாரணைக்கு பயந்து செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ் தப்பி ஓடிய நிலையில், அர்னவ் மனைவி திவ்யாவுக்கு போன் செய்து அடாவடியாக பேசிய செல்லம்மா சீரியல் ஹீரோயின் அன்சிதா, அர்னவ்விடம் காதலை தெரிவித்த ஆடியோ வெளியாகி உள்ளது.

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கொண்ட அர்னவ், திவ்யா கர்ப்பிணியானதும் அவரை எட்டி மிதித்து கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டுக்குள்ளானார். திவ்யா அளித்த புகாரின் பேரில் அர்னவ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு பதிவு செய்த போலீசார், திருவேற்காட்டில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரடியாக சென்று திவ்யாவிடம் விசாரித்தனர்.

அப்போது பெட்டிப்படுக்கையுடன் வெளியே செல்ல முயன்ற அர்னவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டுச்சென்ற அர்னவ் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

செல்லம்மா சீரியல் குழுவினரிடம் 3 நாட்கள் முக்கியமான வேலையாக வெளியூர் செல்வதாக கூறிச்சென்ற அர்னவ் தனது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளதால் அவரை கண்டு பிடிக்க இயலாமல் போலீசார் தவித்து வருகின்றனர். வழக்கறிஞர்கள் மூலம் முன் ஜாமீன் பெறும் முயற்சியில் அர்னவ் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்க்கிடையே தன்னுடைய கணவருடன் என்ன தொடர்பு? என்று நியாயம் கேட்ட திவ்யாவிடம் , கான்பரன்ஸ் காலில் செல்லம்மா சீரியல் நாயகி அன்ஷிதா அடாவடியாக பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் திவ்யா முன்னிலையில் அர்னவ்வுக்கு போனில் ஐ லவ் யூ சொல்லி முத்தமிட்ட கொடுமை அம்பலமாகி உள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments