முதலமைச்சர் பதவிக்காக 5 முறை அணி மாறிவிட்டார் நிதீஷ்குமார் - அமித் ஷா கடும் விமர்சனம்

0 2670
முதலமைச்சர் பதவிக்காக 5 முறை அணி மாறிவிட்டார் நிதீஷ்குமார் - அமித் ஷா கடும் விமர்சனம்

முதலமைச்சர் பதவிக்காக நிதீஷ்குமார் 5 முறை கூட்டணி மாறி விட்டதாக, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா விமர்சித்துள்ளார்.

பீகார் மாநிலம் சிதாப் தியாராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸை எதிர்த்து நெருக்கடிக்காலத்தில் போராட்டம் நடத்தி சிறை சென்றவர் ஜெய பிரகாஷ் நாராயணன் என்றும், அவரின் இயக்கத்தால் பயனடைந்தோர், ஆட்சி அதிகாரத்துக்காக, அதே காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்திருப்பதாகவும் சாடினார்.

அதிகாரத்துக்காக ஜெய பிரகாஷ் நாராயணன் எதையும் செய்ததில்லை என்றும், ஆனால் அதிகாரத்துக்காக 5 முறை கூட்டணி மாறியவர்தான் தற்போது பீகார் முதலமைச்சராக இருப்பதாகவும் அமித் ஷா குறை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments