உதயசூரியன், அரசமரம், வாள்-கேடயம் ஆகிய புதிய 3 சின்னங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது ஷிண்டே தரப்பு..!
உதயசூரியன், வாள்-கேடயம், அரசமரம் ஆகிய மூன்று புதிய சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம், ஏக்நாத் ஷிண்டே தரப்பு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று உத்தவ் தாக்ரே தரப்பினருக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம், ஷிண்டே தரப்பு அளித்த 3 சின்னங்களை ஒதுக்கமுடியாது என தெரிவித்து, புதிய சின்னங்களை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில், உதயசூரியன், வாள்-கேடயம், அரசமரம் ஆகிய மூன்று சின்னங்களில் ஒன்றை ஒதுக்கக்கோரி, ஷிண்டே தரப்பு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
Comments