ஆன்லைன் ஆப் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறித்தவர் கைது..!

0 7357

கோவையில் இணையதள மூலம் பெண்களிடம் பழகி அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் ஆன் லைன் ஆப் மூலம் பெண்களுடன் பழகி அவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களைப் பெற்று அதை வைத்தே அவர்களுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறித்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கூமாபட்டியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான பரமசிவம் என்பது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments