சீனாவில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்று.. பெரும்பாலான நகரங்களில் பொதுமுடக்கம்.!
சீனாவில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதன் எதிரொலியாக பல நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக திங்கட்கிழமை மட்டும் இரண்டாயிரம் பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு பெய்ஜிங்கில் நடைபெறயிருப்பதையொட்டி தொற்று அங்கு பரவுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லாக்டவுனால் ரயில், விமான போக்குவரத்துக்கள் பெருமளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தால் சுற்றுலா வருவாய் பெருமளவிற்கு குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments