120 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து 12 மணி நேரமாக நீந்தியபடி தத்தளித்த பள்ளி மாணவி மீட்பு

0 3812

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கிணற்றில் விழுந்து 12 மணி நேரமாக நீந்தியபடி தத்தளித்த
பள்ளி மாணவியை, தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

கிரே நகரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது கிணறு நீண்ட நாட்களாக வற்றியிருந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக, 10 அடிக்கும் மேல் நீர் நிரம்பியுள்ளது. இதனைக் கண்ட மோகன்ராஜின் 15 வயது மகள், மோட்டார் போடுவதற்காக கிணற்றின் அருகே சென்றபோது, வழுக்கி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

வெகுநேரமாகியும் மகளை காணாததால், கிணற்றின் அருகில் தேடியபோது உயிருக்கு போராடியவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments