பொதுத்தேர்தலுக்காக மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு - பிரதமர் இஸ்மாயில்
மலேசியாவில் பொதுத்தேர்தலை நடத்த ஏதுவாக, அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
மலேசிய மன்னரின் ஒப்புதலோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அடுத்த 60 நாட்களுக்குள், மலேசியாவில் 15வது பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், பிரதமர் இஸ்மாயில் இந்த பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தேர்தல் செலவீனங்கள், பருவமழை தொடங்க இருப்பது போன்றகாரணங்களால், தேர்தலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments