நடிகை நயன் வாடகை தாயை நாடியது ஏன் ? அமைச்சர் சொல்வது என்ன ?

0 5400

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி திருமணமாகி 4 மாதங்களே ஆகும் நிலையில் விதிமுறைக்கு உட்பட்டுத்தான் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றார்களா ? என்று  மருத்துவப்பணிகள் இயக்குனர் மூலம் விசாரணை நடத்த பரிசீலிப்பதாக அமைச்சர் மா . சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நடிகை நயன் தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி திருமணம் முடிந்து 4 மாதங்களேயான நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மருத்துவ சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் நயன் - விக்கி தம்பதி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றனரா ? என்ற கேள்விக்கு 21 வயது முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் கருமுட்டைகளை வாடகை தாய்க்கு தரலாம் என்ற விதிமுறைப்படி இது சாத்தியமாகி இருக்கலாம் என்று சுகாதாரத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருமணம் முடிந்து 5 வருடங்கள் குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெறலாம் என்ற விதி இருக்க, திருமணம் முடிந்து  நான்கே மாதங்களில் நயன் - விக்கி ஜோடி குழந்தை பெற்றதாக அறிவித்துள்ளது சட்ட விரோதம் இல்லையா ? என்ற கேள்விக்கு,  அவர்கள் சட்ட விதிமுறைக்கு உட்பட்டுத்தான் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றார்களா ? என்று மருத்துவப்பணிகள் இயக்குனர் மூலம் விசாரணை நடத்த பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சட்ட விதிகளை மீறி வாடகை தாயை நியமித்தது உறுதியானால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட அதிக வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments